Screen Reader Access     A-AA+
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை, மதுரை - 625001, மதுரை .
Arulmigu Meenakshi Sundaraswarar Temple, Madurai - 625001, Madurai District [TM031962]
×
-

  மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் புதுமைத்திட்டமான திருக்கோயில் அன்னதானத்திட்டம் கடந்த 2002-ஆம் ஆண்டில் இருந்து இத்திருக்கோயிலில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் இத்திருக்கோயிலில் முதன்முதலில் நடைமுறைப்பட்டுத்தப்பட்டபோது, தினமும் 200 பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட நிலையில், படிப்படியாக பயனாளிகளின் எண்ணிக்கை விரிவுப்படுத்தப்பட்டு 2017-ஆம் ஆண்டிலிருந்து 300 பயனாளிகளுக்கும், 2018-ஆம் ஆண்டிலிருந்து 500 பயனாளிகளுக்கும், 2020-ஆம் ஆண்டிலிருந்து 700 பயனாளிகளுக்கும் தினசரி மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. இதற்கான திட்டச்செலவாக பயனாளி ஒருவருக்கு ரூ.35/- செலவிடப்பட்டது. இந்த மதிய உணவில் சாதம், சாம்பார், கூட்டு, பொரியல், மோர், அப்பளம் மற்றும் ஊறுகாய் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு வாரமும் புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இவற்றோடு கூடுதலாக பாயாசமும் வழங்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் மீனாட்சி நாயக்கர் மண்டபத்திற்கு அருகே அமைந்துள்ள அன்னதானக்கூடத்திற்கான சமையல் அறையில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. தினமும் முற்பகல் 11 மணியளவில் இந்த அன்னதானம் வழங்குவது தொடங்கியது. மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிப்பு செய்யப்பட்டபடி இந்தத் திட்டத்தை நாள் முழுவதும் பக்தர்களுக்கு உணவு வழங்கும் விரிவு படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இதற்காக கொதிகலன்கள், குளிர்பதன அறை போன்றவை கொண்ட நவீன சமையல் கூடம் அமைக்கப்பட்டு மேலும் ஒரே நேரத்தில் 140 நபர்கள் அமர்ந்து உணவு அருந்தக்கூடிய உணவுக்கூட வசதியும் ஏற்படுத்தப்பட்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 31.12.2022 தேதியன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி முடிய நாள்தோறும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த அன்னதானத்திட்டத்தில் பங்கேற்று நாள் ஒன்றுக்கு 4000 நபர்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புவோர் ரூ.1,40,000/- இத்திட்டத்திற்கென நன்கொடையாக வழங்கலாம். ரூ.28,00,000/-ஐ எவரேனும் நன்கொடையாக வழங்கினால், அத்தொகை வங்கியில் நிரந்தர முதலீடு செய்யப்பட்டு, அதற்கு கிடைக்கும் வட்டித்தொகையிலிருந்து அந்த நன்கொடையாளர் குறிப்பிடும் ஒரு தினத்தில் ஒவ்வோர் ஆண்டும் 4000 நபர்களுக்கு உணவு வழங்கப்படும். இந்த அன்னதானத் திட்டத்திற்கு பக்தர்கள் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரித்துறை அலுவலக ஆணையரது உத்தரவு எண்...464/200/2010-11/-, நாள்.07.07.2011-ன்படி வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 80(ஜி)-ன் கீழ் வருமான வரி விலக்கு உண்டு. அதற்கான நிரந்தர கணக்கு எண்.0359 இத்திட்டத்திற்கான நன்கொடைகள் நிருவாகி ( இத்திருக்கோயில் துணை ஆணையர் / செயல் அலுவலர்), அன்னதானத் திட்ட நிதி அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை என்கிற பெயரில் காசோலை அல்லது வரைவோலையாகச் செலுத்தப்படலாம். இத்திட்டத்தில் ரூ.70,000/- செலுத்தி நன்கொடையாளராக ஒருவர் இருந்து கொள்ளலாம். மூலதனத்திலிருந்து வரும் வட்டி மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தினத்தில் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பெறும். குறிப்பிட்ட ஒரு நாளில் 100 பேருக்கு அன்னதானம் வழங்க ரூ.3,500/- செலுத்த வேண்டும். அன்னதான நன்கொடையை காசோலையாகவோ, வரைவோலையாகவோ இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை என்ற பெயருக்கு அனுப்பலாம்.