Screen Reader Access     A-AA+
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை, மதுரை - 625001, மதுரை .
Arulmigu Meenakshi Sundaraswarar Temple, Madurai - 625001, Madurai District [TM031962]
×
Temple History

தல வரலாறு

இத்தலத்தின் வரலாறு தனிப்பெருமை வாய்ந்ததாகும். தெய்வ மணங்கமழும் தேவாரத் திருப்பதிகங்களில் இடம் பெற்றுள்ள 274 தலங்களில் இதுவும் ஒன்று. முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் அருளுருக் கொண்டு அறுபத்து நான்கு திருவிளையாடல்களைச் செய்தருளிய பெருமை வாய்ந்த இத்தலத்தின் வரலாறு படிப்போர் இன்புறும் வண்ணம் அமைந்துள்ளது. முற்காலத்தில் மதுரையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கடம்பமரங்கள் நிறைந்த காடாக இருந்தன. அக்காலத்தில் குலசேகரப் பாண்டியன் மணவூரில் இருந்து பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். அப்பொழுது மணவூரில் வாழ்ந்த தனஞ்செயன் என்னும் தனவணிகன் வாணிகத்தின் பொருட்டுப் பல ஊர்களுக்கும் சென்று கடம்பவனம் வழியாகத் தன் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தான். வரும் வழியில் இருட்டிவிட்டது. காட்டின் நடுவில் இருட்டி விட்டது. காட்டின் நடுவில் ஓரிடத்தில் தங்க நேரிட்டது. அங்கே...

தல பெருமை

பாண்டி நாடே பழம்பதி, தில்லைக் கூத்தனே தென்பாண்டி நாட்டானே என மாணிக்கவாசகப் பெருந்தகையாலும் தண்ணார் தமிழினிக்கும் தண் பாண்டிய நாடு, நீலமாமிடற்றால வாயிலான் பாலதாயினார் ஞாலம் ஆள்வலே எனத் திருஞானசம்பந்தராலும் சீரானைத் தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே என்று திருநாவுக்கரசராலும் பாடப்பெற்ற சிறப்புடைய தொன்மைப்புகழ் பூண்டது பாண்டிய நாடு. மூர்த்தி சிறப்பு, தலச்சிறப்பு, தீர்த்தச் சிறப்பு என்னும் முப்பெருஞ் சிறப்புக்களால் முதன்மை பெற்று விளங்கும் இத்தலம் நினைத்தாலே முக்தி தரும் தன்மையுடையது. இவ்வுண்மையை திருவால வாய்க்கிணையாம் ஒருதலமும் தெய்வமணம் செய்யப் பூத்த மருவார் பொற் கமலநிகர் தீர்த்தமும் அத் தீர்த்தத்தின் மருங்கே ஞான உருவாகி யுறைசோம சுந்தரன் போல் இகபரம் தந்து உலவா வீடு தருவானும் முப்புவனத் தினும்...

இலக்கிய பின்புலம்

இலக்கியங்கள் பொய்யடிமை இல்லாத புலவர்கள் மதுரையைப் பற்றி நிறைய பாடியிருக்கிறார்கள். மதுரையைப் புலவர்கள் தம் மதிக் கோலால் அளந்து, சொல்ஏரால் வளப்படுத்தி, அறிவு நீர் பாய்ச்சி, கவிதைப்பயிர் தழையச் செய்தார்கள். அவர்கள் இட்ட பயிர்தான் இரண்டாயிரம் ஆண்டுகளாகியும் கூட இன்றைக்கும் இளமை நலம் துய்க்கும் வண்ணம் சிவபோகத்தையும் அறிவமுதத்தையும் அளித்து வருகிறது. வடமொழியாளர்களால் பழமையான காவியங்கள் என்று போற்றப்படும் இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் பாண்டிய நாட்டைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இராமாயணம் சீதையைத் தேடப்போகும் வானர வீரர்களிடம் சுக்ரீவன், தென்புலத்தில் கபாடபுரம் என்றொரு நகரம் உண்டென்றும், அதன் வாயிற்கதவுகள் பொன்னாலும், முத்தாலும் அழகு படுத்தப்பட்டிருக்கும் என்றும் கூறினான் என்று வால்மீது இராமாயணம் இயம்புகிறது. (காபடபுரம் கடல்கோளால் அழிந்துபட்ட இரண்டாம் தமிழ்ச்சங்கம் கூட்டப்பெற்ற தற்போதைய மதுரைக்கு முன்பு...

புராண பின்புலம்

மதுரையை ஆண்டு வந்த மலத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனாமாலையும் மகப்பேறு வேண்டி இறைவனை வழிப்பட்டு வந்தனர். பல்வேறு யாகங்களைச் செய்தனர். பிறகு பிரமன் உபதேசத்ததன்பேரில் புத்தரகாமேட்டியாகம் மேற்கொண்டனர். அப்போது அவர்களுக்கு அருளும் பொருட்டு இவ்வுலகையே ஈன்ற அன்னையான உமாதேவியார் அந்த யாகக்குண்டத்தில் மூன்று தனங்களை உடைய பெண் குழந்தையாகத் தோன்றினார். குழந்தை உருக்கண்டு பேரானந்தம் பெற்ற அரசனும், அரசியும் அக்குழந்தையின் உருவிலே இருக்கும் மாற்றம் கண்டு மனம் வருந்தினர். அப்பொழுது சிவபெருமான் அசரிரீயாக மன்னா மனம் வந்தாதே இக்குழந்தைக்கு தடாதகை என்று பெயரிட்டு கல்வி கேள்விகளில் சிறப்பு பெறுமாறு அனைத்துக் கலைகளையும் கற்றுக் கொடு. தனக்கேற்ற கணவனை இக்குழந்தை காணும் போது மிகுதியாக உள்ள ஒரு தனம் மறைந்துவிடும் என்று கூறினார். அரசனும்...