பொதுவில் மீனாட்சி அம்மன் திருக்கோயில் என அழைக்கப்படும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலானது, கோயில் நகரமாம் மதுரையில் வைகை ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் மூலவர்கள் பார்வதியின் அம்சமான அருள்மிகு மீனாட்சி மற்றும் சிவனின் அம்சமான அருள்மிகு சுந்தரேசுவரர் ஆவர். இத்திருக்கோயில் ஆனது காலத்தொண்மை வாய்ந்ததும், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுமான மதுரை மாநகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் தெய்வங்கள் ஆறாம் நூற்றாண்டின் இலக்கியங்களில் புகழப்பட்டுள்ளனர். மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ள இத்திருக்கோயில் வளாகமானது சராசரியாக 45 முதல் 50 மீட்டர்கள் உயரம் கொண்ட 14 கோபுரங்களால் சூழப்பட்டுள்ளது. இதில் தெற்கு கோபுரமே 51.9 மீட்டர்கள் (170 அடிகள்) உயரத்துடன் மிக உயர்ந்த கோபுரமாகத் திகழ்கிறது. இத்திருக்கோயில் வளாகமானது சிற்பங்கள் நிறைந்த தூண்களைக்...